--- --:--:-- --

நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூல்..!

6

மிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் சென்றால் 200 ரூபாய், எச்சில் துப்பினாலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினாலோ தலா 500 ரூபாய் விற்கும் கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 

அதன்படி முகக் கவசம் அணியாமல் சென்றதால் சென்னையை தவிர்த்த பிற நகரங்களில் நேற்று ஒரே நாளில் 89 லட்சத்து 61 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததற்காக 8 லட்சத்து 51 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் முக கவசம் அணிந்ததற்காக இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் வழக்குகளும் தனிமனித இடைவெளியை கடை பிடிப்பதற்காக இதுவரை 1,465 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Right Menu Icon