தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







