--- --:--:-- --

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

3.1

ங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வங்க கடலில் ஏற்கனவே உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.

 

24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகிற 14ம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon