--- --:--:-- --

பள்ளி ஆசிரியை தாக்கியதில் மாணவனின் தலையில் வீக்கம்..!

1

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை தாக்கியதில் இரண்டாம் வகுப்பு மாணவனின் தலையில் வீக்கமடைந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வீர கோயில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் கிஷோர் என்ற மாணவர் டைரி எழுதி வரவில்லை எனக் கூறி ஆசிரியை தலையில் தாக்கியுள்ளார். இதனால் மாணவனின் தலையில் வீக்கம் அடைந்து உள்ளது. இது குறித்து கிஷோரின் பெற்றோர் ஆசிரியரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

 

இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Right Menu Icon