தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வருகிற 16-ஆம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதைப்போல வரும் 17ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அத்துடன் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை கேரள கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் தென் மேற்கே அரபிக்கடலும், அரபிக்கடல் மற்றும் வடக்கு கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.





