நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.!
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதில் தென்மேற்கு பருவக்காற்று வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.







