மருத்துவமனைக்கு தாயை 4 கி.மீ தூரம் முதுகில் சுமந்து செல்லும் மகள்..!
பீகாரில் கால் மற்றும் முதுகு எலும்பு முறிவால் அவதியுறும் தாயை அவரது மகள் வீட்டில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனைக்கு முதுகில் சுமந்து சென்று சிகிச்சை அளித்து வருகிறார்.
கோபால்கட்ச் பகுதியை சேர்ந்த பெண் கணவரை இழந்த நிலையில் தாயுடன் வசித்து வருகிறார். அந்த தாய் கால் மற்றும் முதுகு எலும்பு முறிவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மகள் முடிவு செய்தார்.
ஆனால் அவர் வசிக்கும் பகுதியில் இருந்து ஆட்டோ எதுவும் இல்லாததால் தனது தாயை முதுகில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று உள்ளார். பின்னர் அந்த சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் தாயே முதுகில் சுமந்தபடி வீடு திரும்புகிறார்.






