24 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
24 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் வருகின்ற 24ஆம் தேதி வரை மத்திய இந்திய பகுதிகளில் பரவலான மழைக்குள் மேலும் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் ஆந்திர கடலோர பகுதிகள் சத்தீஸ்கர் மற்றும்மத்தியபிரதேச பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






