--- --:--:-- --

சி‌பி‌எஸ்‌இ 10ஆம், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

2.1

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய மாநிலங்கள் தங்களது தேர்வுகளை ரத்து செய்துள்ளது.

 

இதை மேற்கோள் காட்டி சிபிஎஸ்சி வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் இருந்து அறிக்கை கேட்டிருந்தது.

 

சிபிஎஸ்சி நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து கருத்துக்களை கேட்டனர். அதில் குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, ஒரிசா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்களால் தற்போதைய நிலையில் தேர்வுகளை நடத்த இயலாது என கூறியிருக்கின்றனர்.

 

எனவே இந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ நிர்வாகத்தின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon