--- --:--:-- --

பெற்றோரை திட்டியதால் கோவமடைந்த சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

3

சாத்தான்குளம் சர்ச்சையை தொடர்ந்து கோவையில் தாயின் கண் முன்னே மகனை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், பொது முடக்கத்தில் டாஸ்மாக்கில் குவியும் கூட்டத்தை கண்டும் காணாமல் இருக்கும் காவல் துறையினர்தள்ளுவண்டி, செல்போன் கடை நடத்தும் எளிய மனிதர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தள்ளுவண்டி கடை நடத்தும் தாயுடன் வாக்குவாதம் செய்த காவலர்களை தட்டிக் கேட்ட மகனை காவல்துறையினர் அடித்து ஜீப்பில் ஏற்றி காட்சிகளை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon