மதுரையில் கர்ப்பிணி உள்ளிட்ட 10 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு!
மதுரையில் கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உள்ளிட்ட 10 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரொனா வார்டில் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த 34 வயது கர்ப்பிணி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.
நாகமலை, புதுக்கோட்டை, வடக்கு மேல கரையைச் சேர்ந்த 27 வயது இளைஞர் மதுரை வடக்குவெளி வீதி சேர்ந்த 57 வது நபர் உள்ளிட்ட மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர். இதே போல தனியார் மருத்துவமனை வார்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே மாவட்டத்தில் கொரொனாவுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர்.
இருப்பினும் இன்று பலியான பத்து பேரும் எதனால் உயிரிழந்தார்கள் என்பது உறுதிசெய்யப்படவில்லை. உயிரிழந்தோரின் சடலங்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து 3 ஆம்புலன்ஸ் வாகனங்களில் தத்தநேரி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்காக திண்டுக்கல்லில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.






