--- --:--:-- --

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு ஜாமீன் கொடுக்க சி‌பி‌ஐ மறுப்பு..!

11

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் இருவருக்கும் ஜாமீன் கொடுக்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாமஸ் பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காவலர் தாமஸ் பிரான்சிஸ் என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சாதாரண கணினி இயக்குனர் மட்டுமே இருந்தார். இந்த வழக்கில் அவருக்கு எந்த தொடர்பும் கிடையாது என வாதிட்டார்.

 

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Right Menu Icon