தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் 5995 பேர்… உயிரிழப்பு 101…! சென்னையில் தொடர்ந்து ஏறுமுகம்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 101 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் கடந்த பல நாட்களாகவே 6 ஆயிரத்திற்கு சற்று குறைவாகவே பதிவாகி வருகிறது.
இன்றைய நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5995 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 3,67,430ஆக உயர்ந்துள்ளது.மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5,743ஆகும். இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 3,07,677ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 101 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரையிலான மொத்த பலி எண்ணிக்கை 6,340 ஆக உயர்ந்து உள்ளது.
இது வரை, தமிழகம் முழுவதும் 40,62,943 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும், 72,423 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
“சென்னையில் தொடர்ந்து ஏறுமுகம்”
சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏறுமுகமாகவே உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1282 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மொத்தம் 1,22,757 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடுத்தபடியாக செங்கல்பட்டில் 430, கோவை 395, திருவள்வூர் 369, சேலம் 367 என மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு உறுதியாகியுள்ளது.






