--- --:--:-- --

சிவகங்கையில் சாதி வெறி.. நீ எல்லாம் எப்படி புல்லட் ஓட்டலாமா எனக் கூறி 2 கைகளை வெட்டிய கொடூரம்..!

6

மானாமதுரை அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரின் கைகளை வெட்டிய மூன்று நபர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராமன் – செல்லமா தம்பதியின் மகன் அய்யாசாமி என்பவர் சிவகங்கை அரசு கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

 

அய்யாசாமிக்கு அவருடைய சித்தப்பா பூமிநாதன் என்பவர் புதிதாக புல்லட் இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். இந்த இருசக்கர வாகனத்தை மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் வினோத், ஆதி, ஈஸ்வரன், வல்லரசு ஆகிய மூன்று பேர் அடித்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனை குறித்து முடித்து வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் அய்யாசாமி கல்லூரி விடுத்துவிட்டு வீடு திரும்பும் பொழுது வினோத், ஆதி, ஈஸ்வரன், வல்லரசு ஆகியோர் சேர்ந்து அவரது கைகளை வெட்டி உள்ளனர். மேலும் அவரது வீட்டை அடித்து உடைத்துள்ளனர்.

 

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இளைஞர்கள் மூன்று பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளைஞர் அய்யாசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Right Menu Icon