சாதிவாரி அரசியல் – காங்கிரசுக்கு பிரதமர் மோடி கண்டனம்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கருத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து நாட்டில் எவ்வளவு மக்கள் தொகை உள்ளதோ அந்த அளவிற்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தொகையில் அதிகம் உள்ளது ஏழைகள் தான் என்றும் அவர்களுக்குத்தான் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மக்கள் தொகை அடிப்படையில் உரிமைகளை முடிவு செய்ய வேண்டும் என்றார். பெரும்பான்மை சமூகத்திற்கு அனைத்து உரிமைகளும் கிடைத்துவிடும் என்றும் சிறுபான்மையினருக்கு எந்த உரிமையும் கிட்டாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களை சாதி மத அடிப்படையில் துண்டாக்க காங்கிரஸ் விரும்புவதாகவும் காங்கிரஸ் கட்சி ஊழலை வளர்க்கும் கட்சி என்றும் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.






