--- --:--:-- --

தடுப்பை தாண்டி சாலையில் புகுந்த சரக்கு ரயில்..!

3

காஞ்சிபுரம் அருகே தண்டவாள தடுப்பை உடைத்துக் கொண்டு சரக்கு ரயில் சாலைக்குள் வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

கர்நாடகாவின் பெல்லாரியில் இருந்து 20 தொழிற்சாலைக்கு காயில் ஏற்றி வந்த சரக்கரையில் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்திற்கு வந்த பொழுது சிக்னல் கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது.

 

சிக்னல் கோளாறு இருப்பதை அறிந்த ஓட்டுனர் ரயில் நிறுத்த முற்பட்டபோது சரக்கு முனையத்தில் உள்ள தண்டவாளத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு ரயில் வெளியேறி சாலைக்குள் வந்தது. இந்த விபத்தில் சாலையில் இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

 

அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் பெரிதாக இல்லாததால் முயற்சி ஏதும் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon