--- --:--:-- --

“ஒய் திஸ் கொலவெறி” பாடல் காப்புரிமையை மீறியது தொடர்பான வழக்கு

12

கொலவெறி பாடல் காப்புரிமையை மீறியதாகக் கூறப்படுவது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

இந்த பாடலின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையை பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனம் காப்புரிமையை மீறி இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டதாக திரைப்படத்தை தயாரித்த ஆர்கே புரொடக்ஷன் நிறுவனம் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவன அதிகாரிகள் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதை எதிர்த்து சோனி மியூசிக் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சோனி மியூசிக் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டதற்காக ஆதாரங்கள் இருப்பதால் வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Right Menu Icon