--- --:--:-- --

யாசிகா சென்ற கார் விபத்துக்குள்ளானதில் நடிகை மீது வழக்குப்பதிவு..!

5

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே நடிகை யாசிகா சென்ற கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார்.

 

அப்போது மாமல்லபுரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் சென்ற போது சாலையின் நடுவில் தடுப்பு சுவரில் மோதி கார் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் நடிகை படுகாயம் அடைந்துள்ளார். நடிகையின் தோழி நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ளார்.

 

மேலும் இரண்டு நண்பர்கள் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் யாசிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Right Menu Icon