புதிய அட்டைதாரர்கள் வரும் 31ம் தேதிக்குள் கொரொனா நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளலாம்..!
கொரோனா நிவாரண தொகையை பெறாதவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரொனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த மே மாதம் ஜூன் மாதங்களில் இரண்டு தவணைகளாக தலா இரண்டாயிரம் ரூபாய் நிதி வழங்கியது.
நிவாரணத் தொகையில் இரண்டாவது தவணை தொகை ரூ 2000 மற்றும் 14 மளிகை பொருட்களும் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகையை பெற இயலாதவர்கள் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து மே 10ஆம் தேதி முதல் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்த மூன்று லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழக அரசு மக்கள் அவசரமின்றி அவற்றை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் புதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள் ஆகஸ்ட் முதல்வாரத்தில்அவரவருக்கான நியாய விலை கடைகளில் நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.







