--- --:--:-- --

தகராறில் காதை கடித்து துப்பியவர் மீது வழக்கு..!

11

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டின் முன்பு கொட்டப்பட்ட மணலால் ஏற்பட்ட தகராறில் காதை கடித்து துப்பியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பூனை கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் வீட்டிற்கு முன்பாக மணல் கொட்டப்பட்டு இருந்தது.

 

இதில் அவரின் பக்கத்து வீட்டுக்காரரான காந்தி ராஜனுக்கும், ஆனந்த் குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் காந்தி ராஜன் ஆனந்த் குமாரின் வலதுபக்க காதை கடித்து துப்பினார். இதனை தொடர்ந்து ஆனந்த் குமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

 

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் காந்திராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon