முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு ரத்து..!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பிஅன்பழகனுக்கு எதிரான பலகை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அமலில் இருந்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் போராட்டம் நடத்தியதாக கேபி அன்பழகனுக்கு எதிராக தர்மபுரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் பதியப்பட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டும் என கே.பி.அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி கேபி அன்பழகனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.





