கார் கவிழ்ந்து விபத்து..! 7 மாத குழந்தையை காயமின்றி மீட்ட பொது மக்கள்..!
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் சிக்கித்தவித்த தம்பதியும் அவர்களின் குழந்தையையும் கைகளால் கண்ணாடிகளை உடைத்து பொதுமக்கள் மீட்டனர்.
மதுரை கூடல் நகரை சேர்ந்த வருண் தாஸ் திருச்சியில் மகப்பேறுக்கு சென்றுவிட தனது மனைவி ஜான்சி, ஏழுமாத குழந்தையையும் அழைத்துக்கொண்டு காரில் மதுரைக்கு திரும்பியுள்ளார். திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முக்கன்பாலம் அருகே சென்ற போது காரில் இ பாஸ் காற்றில் பறந்த போது காரை ஓட்டிக் கொண்டிருந்த அவர் பிடிக்க முற்பட்டுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரின் கண்ணாடியை உடைத்து 7 மாத கைக்குழந்தையும் இளம் தம்பதியை மீட்டனர். தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு சென்று துவரங்குறிச்சி காவல்துறையினர் தம்பதியையும் குழந்தையையும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக வரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ், காவல்துறையினர் வரும்வரை காத்திருக்காமல் பொதுமக்களே விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.






