பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் மகன் ஓட்டிச் சென்ற கார் விபத்து..!
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் மகன் ஓட்டிச் சென்ற கார் சேலத்தில் விபத்தில் சிக்கியது. வானதி சீனிவாசனின் 23 வயதான மகன் ஆகாஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது காரில் கோவையில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
கொண்டலாம்பட்டி மேம்பாலத்தில் வேகமாக வந்த கார் பாலத்தில் இருந்து கீழே இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் தடுப்பு சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சேதமடைந்த காரிலிருந்து ஆகாசை மீட்டனர்.
விபத்து நடந்த பகுதியை வளைவு என்பதால் அதிவேகத்தில் வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து இருக்கக்கூடும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.






