கடலூரில் நாளை பிரச்சாரம்.. விஜய்க்கு அனுமதி..!
விஜய் பிரச்சாரம் காரணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரம், பரப்புரை என தேர்தல் களமே சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நாளை பிற்பகல் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதற்காக அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய்க்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது உதயநிதி ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் திட்டக்குடி, நெய்வேலி, வடலூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். தேர்தல் விதிமுறைகளின் படி முதலில் யார் விண்ணப்பிக்கிறார்கள்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் விஜய் முதலில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்ததால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





