நடுரோட்டில் பெண் மீது கொடூர தாக்குதல்..வெளியான அதிர்ச்சி வீடியோ..!
பெண்ணை கொடூரமாக தாக்கியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சோப்ரா பகுதியைச் சேர்ந்த தேஜிமுல் பரபரப்பான சாலையில் இளம்பெண் மற்றும் அவருடன் வந்த நபர் கம்பால் கொடூரமாக தாக்கினார்.
எனினும் அவரை தடுக்காமல் சுற்றி இருந்த சிலர் வேடிக்கை பார்த்த காட்சிகள் வெளியாகி உள்ளன. வலி தாங்க முடியாமல் பெண் கதறிய நிலையில் அதனை தொடர்ந்து தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பெண்ணை தாக்கிய நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையவர் என கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






