--- --:--:-- --

மின்கம்பியை மிதித்த சகோதரர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

3

ஞ்சாவூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கல்யாண ஓடை பகுதியை சிறந்த கௌதம், தினேஷ் உடன்பிறந்த சகோதரர்கள்.

 

அந்த பகுதியில் உள்ள மரவ காடு வாய்க்கால் அருகே ஆடுகளுக்கு இலை பறிப்பதற்காக சகோதரர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வாய்க்கால் பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தம்பி மீது மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்துள்ளார்.

 

தம்பி விழுந்து கிடப்பதைக் கண்டு காப்பாற்ற சென்ற அண்ணன் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதை கண்ட அந்த பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்த பின்னர் அந்த பகுதியில் மின் இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் சிறுவர்களான அண்ணன் தம்பி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon