--- --:--:-- --

காதலன் பேசாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!

4

சென்னை மதுரவாயலில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆலப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பவித்ரா போரூரில் உள்ள துணி கடையில் பணியாற்றி வந்துள்ளார்.

 

அதே துணி கடையில் பணியாற்றி ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரை காதலிப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது ஆன்லைன் உணவு டெலிவரி பாயாக இருக்கும் மோகன் கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுடன் பேசுவது இல்லை என கூறப்படுகிறது.

 

திங்கள்கிழமை இரவு பரஸ்பரம் பிணக்கு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பலமுறை முயன்றும் அந்த பெண் செல்போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக அந்த பெண்ணை மீட்டுள்ளனர். இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon