திருவாடானை அருகே தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன்..!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே கோனேரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன், மகன்கள் பார்த்திபன்(31), வேலு(33). இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வேலுவின் மனைவி கடந்த வருடம் இறந்தவிட்டார். இவரது தம்பி பார்த்திபனுக்கு திருமணம் முடிந்து 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
பார்த்திபன் வெளியூரில் வேலைபார்த்து வந்த நிலையில் கொரோனோ வைரசால் ஊரடங்கை அடுத்து தற்போது வீட்டில் வசித்து வந்தார். வீட்டில் இருப்பது வேலுவிற்கு பிடிக்கவில்லை
இந்நிலையில் திங்கள் கிழமை பகலில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாத்திபனை நீ வீட்டில் இருக்காதே என்று சண்டையிடடுள்ளார் வேலு.

அதன் பின்னர் அன்று இரவு பார்த்திபன் வீட்டில் இரவு 8.30 மணியளவில் படுத்திருந்த போது வேலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மார்பில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலு தப்பி ஓடிய நிலையில் அக்கம் பக்கத்தினர் திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள.
அதனை தொடர்ந்து மருத்துவமனை பகுதியில் ஒருவித பதட்டம் நிலவியது. பின்னர் பார்த்திபனின் மனைவி வினோதினி கொடுத்த புகாரின் பேரில் திருவாடானை காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து தலைமறைவான வேலுவை தேடிவருகிறார்கள்.






