--- --:--:-- --

பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்தே பணி புரிய அறிவுறுத்தல்..!

3

பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்தே பணி புரிவதை ஊக்கப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

பாலூட்டும் தாய்மார்களும் அவர்களது குழந்தைகளையும் கொரொனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக பேறுகால பலன் திருத்த சட்டம் 2017 பிரிவு ஐந்தின் கீழ் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்த விழிப்புணர்வை பெண் பணியாளர்கள் மற்றும் பணி வழங்குவோர் மத்தியில் ஏற்படுத்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon