கருக்கலைப்பு செய்ய வைத்த காதலன்..காதலி புகார்..!
கருக்கலைப்பு செய்ய வைத்த காதலன் மீது நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்துவதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். சென்னை பொன்னேரி கிராமத்தில் கிஷோர் என்பவர் தான் அவரது உறவினர் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் கிஷோர் இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து வலுக்கட்டாயமாக உறவு கொண்டிருக்கிறார். இதனால் கர்ப்பம் அடைந்த இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி கருகலைப்பு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் வேறு பெண் ஒருவருடன் கிஷோருக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக வந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கிஷோரும் மிரட்டி வருவதாகவும் இளம்பெண் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னரும் போலீசார் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் இளம்பெண் கூறியிருக்கிறார்.





