சபரிமலையில் 2040 வரை படிபூஜைக்கு முன்பதிவு..!
சபரிமலையில் படி பூஜை மேற்கொள்ள வரும் 2040 ஆம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த மாதம் 30 ஆம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
2 ஆண்டு இடைவெளிக்கு பின் பெருவழி பாதை திறக்கப்பட்டதால் எருமேலியிலிருந்து உற்சாகமாக பக்தர்கள் பாரம்பரிய பாதை வழியாக தங்களது யாத்திரையை தொடங்கியுள்ளனர்.
இன்றைய மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்நிலையில் 2040 ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்திருப்பதாக திருவிதாங்கூர் தேவசம் வாரியம் தெரிவித்துள்ளது.






