உயிரிழந்த தந்தை, மகன் உடலில் பயங்கர காயம்! சித்ரவதை செய்து கொலை..!
சாத்தான்குளத்தில் சித்திரவதை செய்யப்பட்டதால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன் உடல்களில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. தந்தையும், மகனும் இறந்தது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உடற்கூறு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் என்ன?
மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் மற்றும் வழக்கறிஞர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வுக்கு முன்பாக உடலில் உள்ள காயங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது அப்போது மரணமுற்ற தந்தை மற்றும் மகன் உடல்களில் எந்தெந்தப் பகுதிகளில் எத்தனை காயங்கள் இருந்தன என்பது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
மரணமடைந்த தந்தை மற்றும் மகனுக்கு உடலில் ரத்த கட்டாக இருக்கக்கூடிய காயங்களும், பிறப்புறுப்பில் அதிக காயம் இருந்ததாகவும் பின்புட்டம் மற்றும் ஆசனவாய் பகுதிகளிலும் கொப்பளங்கள் இருந்ததும் கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல மகன் பென்னிக்ஸ்சின் உடலில் 20க்கும் மேற்பட்ட காயங்களும் பின் பகுதியில் தோல் பகுதிகள் கிழிந்தும் இருப்பது கணக்கெடுக்கப்பட்டது.
இவனுடைய தந்தை மற்றும் மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ள நிலையில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநயுவிடமிருந்து நடுவர் நீதிநீதிமன்ற அறிக்கை உடற்கூறு ஆய்வு அறிக்கை விசாரணை அறிக்கை என அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பெற்றுக்கொண்டார்.






