உத்திர பிரதேசத்தை உலுக்கிய படகு விபத்து..!
உத்திரபிரதேசத்தின் குவாலியர் பகுதியில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்தனர். சடங்கு ஒன்றில் பங்கேற்க ஏராளமானோர் கூடி இருந்த நிலையில் ஆற்றை கடக்க படகு ஒன்றில் பெண்கள்.
குழந்தைகள் என சுமார் 35 பேர் சென்றதாக கூறப்படுகிறது. இஞ்சினில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மூன்று பெண்கள் உயிரிழந்த நிலையில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





