திடீரென அறுந்து விழுந்த மின் வயரால் சாலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த விழுந்த ஓட்டைகள்..!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மின்சார ஒயர் அறுந்து விழுந்து தீப்பற்றி எரிந்ததால் சாலையில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டன. குடுவாஞ்சேரி சதாசிவம் நகர் பகுதி வழியாக தொழிற்சாலைகளுக்கு 11 ஆயிரம் வோல்ட் மின்சாரம் எடுத்துச் சொல்லும் உயர் மின்னழுத்த வயர் திடீரென அறுந்து விழுந்தது.
தீப்பற்றி எரிந்த வயரால் தார் உருகி சாலையில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டன. சீரமைப்பு பணிகளுக்காக சுற்றுவட்டார பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வயர் அருந்து விழுந்த போது ஆள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.





