--- --:--:-- --

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம் – அன்புமணி ராமதாஸ்

5

விளை நிலங்களில் கால்வாய் அமைக்கும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்களின் உணர்வுகளையும் மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் இரண்டாவது நாளாக என்எல்சி நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.

 

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமை ஏற்படுத்தும் தமிழர்களுக்கு வேலை வழங்கி இருக்கும் என்எல்சிக்கு தமிழர்களின் நிலத்தை பறித்துக் கொடுக்கும் பணியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபடுவதாகவும் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

 

என்எல்சி நிர்வாகம் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும், நிலம் கையகப்படுத்தும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை நெய்வேலி பகுதியில் தனது தலைமையில் பாமக சார்பில் என்எல்சி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon