பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது..!
குழந்தைகள் மது குடிப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
பள்ளி சிறுமிகள் மது குடிப்பது போன்ற வீடியோ வெளியிட்டு திராவிட மாடல் ஆட்சியில் மதுப்பழக்கம், போதை பொருள், புழக்கம் அதிகமாக இருப்பதாக சௌதா மணி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் மீது திருச்சி திமுக மத்திய மாவட்ட ஐடி பிரிவினர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சௌதாமணியை கைது செய்தனர். எக்ஸ் தளத்தில் குழந்தைகள் குடிப்பது போன்ற புகைப்படத்தை பகிர்வதாக சௌதாமணி மீது ஆறு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





