அண்ணாமலை தலைமையில் பாஜக மைய குழு கூட்டம்..!
பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பாரதிய ஜனதா மேலிட பொறுப்பாளர் ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜா உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





