ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த பள்ளி மாணவி ..!
ராமநாதபுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கு சென்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை எனக் கூறி அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகார் அடிப்படையில் மாணவியை தேடி வந்த போலீசாருக்கு ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் வழித்தடத்தில் ஒரு உடல் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு கொலையா தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.





