--- --:--:-- --

தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆட்சி செய்ய பாஜக முயற்சி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

3

மிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆட்சி செய்ய பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்வதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இந்த தேர்தலில் பாஜக, ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் நுழைய விட முடியாத அளவிற்கான வெற்றியை கொடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

 

 

இதற்காக டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரி வந்தடைந்தார். பொன்னேரியில் தனியார் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடையில் ராகுல் காந்தி பங்கேற்று பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு நான் வருவதும் உரை நிகழ்த்துவதும் மரியாதை உரிய விஷயமாகும். தமிழ்நாட்டு மக்கள் மற்றும் தமிழ் மொழி மீதான அன்பு எனக்கு அதிகரித்து கொண்டே போகிறது.

 

 

நான் தமிழ்நாட்டின் பிறக்காவிட்டாலும் எனது குடும்பம் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் என் உணர்வு தமிழ் மண்ணுடன் ஒன்றியுள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக எப்போது எல்லாம் தமிழ்நாட்டை, தமிழ்மக்களை, தமிழ்மொழியை தாக்குகிறார்களோ அப்போது எல்லாம் நான் தமிழனாகவே உணர்ந்து இருக்கிறேன்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வர முயற்சி செய்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பலத்தை நாடாளுமன்றத்தில் குறைக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால் அந்த மசோதாவை நேற்று தோற்கடித்து முறியடித்தோம்.

 

 

பண்டைய காலங்களில் ராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்தப்படும். பாஜகவும் அதை தான் செய்கிறது, ஆனால் அவர்கள் ராணுவம் இல்லாமல் அதை செய்கின்றனர். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்று கூறி அரசியல் சாசனத்தின் மீது பிரதமர் மோடி தாக்குதல் நடத்துகிறார். டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளுவதற்கு அவர்களுக்கு ஒரு பொம்மை முதல்வர் தேவைப்படுகிறார். எப்படி டொனால்ட் டிரம்பிற்கு ஒரு சமரசம் செய்யப்பட்ட பிரதமர் இந்தியாவில் அவருக்கு தேவையோ அதுப்போன்று தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆளுவதற்கு ஒரு பொம்மை முதல்வர் தேவைப்படுகின்றனர். தமிழ் மக்கள் யார் என்று பாஜகவிற்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் தெரியவில்லை. பாஜக தனது வாழ்நாளில் தமிழையும் தமிழ்மக்களையும் ஒரு நாளும் தொட முடியாது.

 

தமிழ்நாட்டிற்கு மக்கள் 6 முக்கிய வாக்குறுதிகளை நான் கொடுக்கிறேன். மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும், மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய், 300 நாட்களில் காலியாக உள்ள அனைத்து அரசு பணிகளும் நிரப்பப்படும் இறுதியாக முதல் முறை சொத்து உரிமை ஆகும் பெண்களுக்கு பத்திர பதிவு செலவு அரசு ஏற்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

 

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, இந்த தேர்தலில் பாஜக, ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் நுழைய விட முடியாத அளவிற்கான வெற்றியை கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலம் தமிழ் மண்ணில் தான் தீர்மானிக்கப்பட வேண்டும். தமிழ் சாதாரண மொழி அல்ல, பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon