--- --:--:-- --

சிகிச்சை முடிந்து தொகுதிக்கு திரும்பிய வானதி.. கண்ணீருடன் வரவேற்ற குஷ்பு..!

4

ருத்துவமனையில் இருந்து நேராகக் தேர்தல் களம் புகுந்த வானதி சீனிவாசனை பார்த்து கலங்கிய நடிகை குஷ்பு,அக்காவுக்காகக் கண்ணீர் சிந்திய சம்பவம் கோவை வடக்கு தேர்தல் களத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் களம் இன்று எதிர்பாராத உணர்ச்சிகரமான திருப்பங்களுக்குச் சாட்சியாக அமைந்தது.

 

பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவரும், அத்தொகுதியின் வேட்பாளருமான வானதி சீனிவாசன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய கையோடு பிரசாரக் களத்திற்குத் திரும்பினார். கோவை, வெங்கடாபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற பிரசாரத்தின் போது, பா.ஜ.க வின் நட்சத்திரப் பேச்சாளரும் நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார்.

 

உடல்நலிவுற்ற நிலையிலும் மக்களுக்காகக் களத்திற்கு வந்த வானதி சீனிவாசனை பார்த்தவுடன், உணர்ச்சிவசப்பட்ட குஷ்பு கண்ணீர் மல்க அவரை இறுகக் கட்டி அணைத்துத் தனது அன்பை வெளிப்படுத்தினார்.
இந்த காட்சி அங்கு இருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

Leave a Reply

Right Menu Icon