--- --:--:-- --

மதுரையில் 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு பிரியாணி திருவிழா..!

23

துரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோவிலில் 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு பிரியாணி திருவிழா நடத்தப்பட்டுள்ளது. டி அம்மாபட்டி கிராமத்தில் இருக்கும் கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் 20 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி கிடாய்கள் வெட்டி பலியிட்டு அம்மனுக்கு படையலிட்டு கொண்டாடுவார்கள்.

 

இந்த ஆண்டு கொரொனா காரணமாக பொங்கல் வைக்கப்பட்டு வருவது தடை செய்யப்பட்டு எளிமையாக விழா நடத்தப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகள் நேற்று நள்ளிரவு அம்மனுக்கு பலியிடப்பட்டது.

 

பின்னர் ஆயிரத்து 500 கிலோ அரிசியுடன் இறைச்சியை கலந்து பிரியாணி தயார் செய்யப்பட்டு பிளாஸ்டிக் வாளிகளில் வைத்து வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon