--- --:--:-- --

பச்சை மிளகாயை காவல் காத்தவரின் தலை துண்டிப்பு..!

3

ர்நாடக மாநிலம் அருகே கதக் மாவட்டத்தில் பச்சை மிளகாயை காவல் காத்த விவசாயியின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதால் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பச்சை மிளகாய் சந்தைகளில் அதிக விலை போவதால் திருடர்கள் பச்சை மிளகாயை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கதக் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் பயிரிட்டு இருந்த பச்சை மிளகாய்களை காவல் காப்பதற்காக ஒருவரை நியமித்திருந்தார். இந்நிலையில் இறுதியில் பச்சை மிளகாய் திருட வந்தவர்கள் அவரை தாக்கி தலையை துண்டாக்கி எடுத்துச் சென்றுள்ளனர்.

 

இதனால் கிராம மக்கள் பதற்றத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மாவட்டத்தில் மிளகாய் திருட்டில் ஈடுபட்டவர்களை அடித்து இழுத்து சென்று கடுமையாக தண்டித்தது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon