கடலூரில் டெங்கு காய்ச்சலுக்கு 27 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
கடலூரில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை விருத்தாச்சலம் அரச மருத்துவமனை பண்ருட்டி அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மழைக்காலம் என்பதால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவோ தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.





