--- --:--:-- --

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. காதலனே எமனாக மாறிய கொடூரம்..!

4

காதல் திருமணம் செய்த மகளை கொலை செய்த கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்ணின் உறவினர்கள் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 

கவுந்தமாடி பகுதியை சேர்ந்த பூரணி கடந்த 2020 இரண்டாம் ஆண்டு மதன்குமாரை திருமணம் செய்து குழந்தை பிறந்த போது பூரணியை அவரது குடும்பத்தினர் சந்திக்க கணவர் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவால் பூரணி இறந்ததாக கூறப்பட்ட நிலையில் உடற்கூறாய் அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

எனவே கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்திற்கு விடுமுறை அளித்து நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon