--- --:--:-- --

வாளியில் மூழ்கி குழந்தை பரிதாப பலி!

neely-wang-marin-newborn-photography-12

வாளியில் குளித்த ஒன்றரை வயது குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது ஒன்றரை வயது மகன் அருண். வழக்கமாக குழந்தையை முருகன் வாளியில் வைத்து குளிப்பாட்டுவது வழக்கம்.

 

நேற்றும் அப்படித்தான் முழுவதுமாக நீர் நிரம்பிய வாளி அருகே குளிப்பதற்காக குழந்தை அருண் நின்றுக் கொண்டிருந்துள்ளார். குளிப்பாட்ட காத்திருந்த அப்பா முருகன் ஒரு போன் கால் வந்ததால் அங்கிருந்து சென்றுள்ளார்.

 

அந்த நேரத்தில் நீர் நிரம்பிய வாளி நீரில் மூழ்கிய சிறுவன் அருண் உயிருக்குப் போராடியுள்ளான். முருகன் குழந்தையை அழைத்தபோது எந்தச் சத்தமும் வராத நிலையில் முருகன் ஓடிச் சென்று பார்த்துள்ளார்.அங்கு உயிருக்குப் போராடிய குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

 

குழந்தை நீரில் மூழ்கிய நேரத்தில் முருகனின் மனைவியும் சமையலறை வேலையில் இருந்த காரணத்தினால் குழந்தையை கவனிக்க தவறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon