--- --:--:-- --

அமெரிக்காவில் கொரொனா நோய் எதிர்ப்பு சக்தி உடன் பிறந்துள்ள குழந்தை..!

6

லகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் கொரொனா நோய் எதிர்ப்பு சக்தி உடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு புளோரிடாவில் முன் களப்பணியாளரான சுகாதாரத் துறையை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் மாடனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டார்.

 

அதன் பிறகு மூன்று வாரங்கள் கழித்து அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆரோக்கியமாக உள்ள அந்த குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் கொரொனா நோய் இருப்பது தெரியவந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாதுகாப்பு அளிக்கிறதா என்பது குறித்து மேற்கொண்டு ஆய்வு நடத்த வேண்டியிருப்பதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon