--- --:--:-- --

கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் அதிரடி..! திருவாடானையில் விதி மீறி செயல்பட்ட “நிதி நிறுவனத்துக்கு சீல்”

54643

திருவாடானை பிடாரி கோவில் தெருவில் விதி மீறி செயல்பட்ட முத்து பைனான்ஸ் நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

 

தமிழகத்தில் கொரோனா முதல்அலையை விட 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த  சிறு தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.ஒரு சில வணிக நிறுவனங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில், திருவாடானை பிடாரி கோவில் தெருவில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் சமூக இடைவெளியின்றி இயங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் உத்தரவின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் கிராம உதவியாளர் உள்பட திருவாடானை காவல் ஆய்வாளர் பாலசிங்கம், சார்பு ஆய்வாளர் சுதர்சன்  ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதைதொடர்ந்து விதியை மீறிய குற்றத்துக்காக அந்த தனியார் நிதி நிறுவனத்திற்கு இன்று பூட்டி சீல் வைக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon