--- --:--:-- --

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம்..!

1

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 11ஆம் தேதி நாடு தழுவிய அளவில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளது.

 

தமிழகத்திலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இந்த சூழலில் பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வரும் 11ஆம் தேதி நாடு தழுவிய அளவில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon