வெளியான ஹேம்நாத்தின் ஆடியோ..! பரபரப்பு தகவல்..!
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக பல புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அவரது கணவர் தான் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார். இருவருக்குமான பிரச்சினை என்ன? சித்ராவின் மன உளைச்சலுக்கு இதுதான் காரணம் என குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்கு பல்வேறு குழப்பங்களும் இந்த வழக்கில் நீடித்து வருகின்றன.
இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் அவரது நண்பர்களுடன் பேசும் சுமார் 30 நிமிட செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்ரா தற்கொலை செய்துகொண்ட அன்று தான் சித்ரா உடன் படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல வில்லை என்று கூறினார்.
சித்ரா தனியாக தனது காரில் சென்று வந்ததாகவும் கூறுகிறார். சித்ராவின் அம்மாவை குற்றம்சாட்டினார். சித்ரா அறைக்குத் திரும்பியதும் இனிதான் வீட்டிற்கு செல்ல முடியாதா? திருமண வேலைகளை தனியாகத்தான் பார்க்க வேண்டுமா? எனக் கேட்டதாகவும் சித்ரா 3 கோடி செலவு செய்து கட்டிய திருவான்மையூர் வீட்டிற்கு செல்ல முடியாதா என கேட்டு வருந்திய தாகவும் கூறுகிறார்.
அறைக்குத் திரும்பிய பிறகு சித்ரா சோர்வாக காணப்பட்டதாகவும் குடும்பத்தில் இருந்து தன்னை பிரித்து விட்டார்கள் என மனம் வெதும்பி பேசியதாகவும் தொலைபேசி உரையாடலில் கூறுகிறார். பின்னர் புகைப்பிடிக்க வெளியே சென்றதாகவும் திடீரென அழைத்துச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டதாக கூறுகிறார்.
விடுதி அலுவலகத்தில் மாற்று சாவி கேட்டு ஊழியருடன் வந்து திறந்து பார்த்தபோது அவர் தூக்கிட்ட நிலையில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். தனக்கு கொடுத்த சத்தியத்தை மீறி அவன் உடன் ஜோடி சேர்ந்த ஆடினாயா எனக் கேட்டதாகவும் அது சிறு பிரச்சனை தான் உடனே சரியாகி விட்டது என்றும் பேசியுள்ளார்.
மூன்று நாட்கள் அவரது தாயார் கொடுத்த தொந்தரவால் தான் சித்ரா கஷ்டத்தில் இருந்தார் எனவும் பேசியுள்ளார். தற்கொலைக்கு காரணமானவர் சித்ராவின் தாயார்தான் என அவ்வப்போது அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டும் ஹேம்நாத் அவரது தாயார் எந்த அளவிற்கு டார்ச்சர் செய்வார் என்பதை தான் கண்கூடாக பார்த்ததாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்த ஹேம்நாத் ஒரு இடத்தில் மெல்லிய குரலில் எதிர்முனையில் இருந்த ரோஹித் தன் அறைக்குத் திரும்பிய சித்ராவின் தலையில் காயம் இருந்தது. அதன் பின்னர் படப்பிடிப்பு முடிந்து சித்ரா எங்கு சென்று வந்தார் என்ன பிரச்சனை எனக்கு தெரியவில்லை என ரகசியம் சொல்வது போல் கூறுகிறார்.
சித்ராவின் அம்மாவை சும்மா விடமாட்டேன் என ஆவேசம் அடையும் அவர் நானும் சித்ராவை போலவே இறந்து விடுவேன் என அழுகிறார். 30 நிமிடங்கள் வாட்ஸ்அப்களில் பேசியதை தடய அறிவியல் துறை சைபர் மூலம் காவல்துறை பதிவை எடுத்துள்ளதாக கூறப்படும் இந்த உரையாடல் சித்திரம் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






