--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் மனைவியை காண முடியாத ஏக்கத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி..!

1

தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐடி ஊழியர் ஒருவர் மனைவி மற்றும் குழந்தையை காண முடியாத விரக்தியில் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

 

பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளைஞரின் மனைவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கோம்பையில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்க்க விரும்பிய இளைஞருக்கு உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் உத்தமபாளையத்தில் உள்ள ஒரு கொரொனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

 

இளைஞரின் மனைவிக்கும் கொரொனா உறுதிப்படுத்தப்பட்டதால் அவரும் கைக்குழந்தையுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான சூழலில் ஐடி ஊழியர் தான் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி சிகிச்சை மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

பலத்த காயம் அடைந்த அவருக்கு அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் அவரை மீட்டு முதலுதவி கொடுத்தபோது அவர் ஏற்கனவே கையிலும், கழுத்திலும் கத்தியால் அறுத்துக் கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க முடியாத மன விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon